வறுமை ஒழிப்பு - நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணருடன் ஆந்திர அரசு ஒப்பந்தம்

வறுமை ஒழிப்பு - நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணருடன் ஆந்திர அரசு ஒப்பந்தம்
வறுமை ஒழிப்பு - நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணருடன் ஆந்திர அரசு ஒப்பந்தம்

மாநிலத்தில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்துவதற்காக நோபல் பரிசு பெற்ற புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் பேராசிரியர் எஸ்தர் டுப்லோவுடன் இணைந்து பணியாற்ற ஆந்திரப் பிரதேச அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

பேராசிரியர் டுஃப்லோவால் நிறுவப்பட்ட அப்துல் லத்தீஃப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகம் (ஜே-பிஏஎல்) வறுமையை ஒழிக்க ஆந்திர அரசாங்கத்துடன் ஒத்துழைத்து விவசாயம், கல்வி, சுகாதாரம், வீடுகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய துறைகளில் திட்டங்களை உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக 20 இந்திய மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.



ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த பிறகு பேசிய பேராசிரியர் டுஃப்லோ, " முதலமைச்சருடன் நாங்கள் மிகவும் பயனுள்ள ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். ஏழை மக்கள் நலனுக்கான திட்டங்களை வகுப்பதில் ஆந்திர முதலமைச்சரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. இதுகுறித்து எங்கள் சொந்த அனுபவங்களில் சிலவற்றை பகிர்ந்து கொண்டேன், வறுமையை ஒழிப்பதற்கான இலக்கை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவோம். நாங்கள் இதற்கான கள கண்காணிப்பை மேற்கொண்டு அவற்றை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவோம்" என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com