பிரதமர் மோடி சர்வாதிகாரி என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை: அமித் ஷா

பிரதமர் மோடி சர்வாதிகாரி என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை: அமித் ஷா
பிரதமர் மோடி சர்வாதிகாரி என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை: அமித் ஷா

பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரமானவர் என்ற குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. ஒவ்வொரு நபரின் ஆலோசனைகளுக்கும் பிரதமர் மோடி முக்கியத்துவம் அளிக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி மத்திய மற்றும் மாநில அரசுகளை ஆட்சி செய்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மோடியை போன்ற ஒரு கேட்பவரை நான் சந்தித்ததில்லை. ஒரு சந்திப்பின்போது மோடி தேவையான அளவு குறைவாக பேசுவார். ஆனால் அனைவரையும் பேசச்சொல்லி பொறுமையாக கேட்கிறார். மற்றவர்களின் கருத்திற்கு மதிப்பு கொடுத்து பின்னர் ஒரு முடிவை எடுக்கிறார். எனவே அவர் சர்வாதிகாரி என்ற குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. மோடி எடுக்கும் முடிவு நாட்டுக்கானது என்பது பொதுமக்களுக்குத் தெரியும்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com