'கழிவறை கட்டும் வரை வீட்டுக்குள் வரமாட்டேன்' மணமகள் உறுதி
'கழிவறை கட்டும் வரை வீட்டுக்குள் வரமாட்டேன்' மணமகள் உறுதி
ஹரித்வாரின் மணமகள், திருமணத்திற்குப் பிறகு கணவரின் வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டார். அதற்கான காரணம் கேட்ட போது, கணவன் வீட்டில் கழிவறை இல்லாததால் அவரது வீட்டிற்குள் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
ஹரித்துவாரைச் சேர்ந்தவர் மோனிகா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்னரே வீட்டில் கழிவறை கட்டி இருக்க வேண்டும் என மணமகன் வீட்டில் மோனிகா நிர்ப்பந்தம் செய்துள்ளார். ஆனால் திருமணம் முடிந்தும் கழிவறை கட்டவில்லை. இந்த நிலையில் கழிவறை கட்டும் வரை வீட்டினுள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என கூறி தனது தந்தை வீட்டிலேயே அவர் தங்கியுள்ளார்.
இதுபோன்று, கான்பூரில் கடந்த ஏப்ரல் 17 ம் தேதி நேஹா என்ற பெண் கணவரின் இல்லத்தில் கழிப்பறை இல்லாததால் திருமணம் செய்து கொள்ள மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.