சிறையில் ப.சிதம்பரத்திற்கு சிறப்பு வசதிகள் இல்லை..!

சிறையில் ப.சிதம்பரத்திற்கு சிறப்பு வசதிகள் இல்லை..!

சிறையில் ப.சிதம்பரத்திற்கு சிறப்பு வசதிகள் இல்லை..!
Published on

சிறையில் ப.சிதம்பரத்துக்கு மேற்கத்திய கழிவறையுடன் கூடிய தனி அறை தவிர வேறு எவ்வித சிறப்பு வசதியும் அளிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில், அவர் காவல்துறை பேருந்தில் அழைத்து செல்லப்பட்டார். ரோஸ் அவின்யூ பகுதியிலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திகார் சிறைக்கு சுமார் அரை மணி நேரத்தில் சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, ஆசியாவிலேயே மிகப்பெரிய திகார் சிறையில், பொருளாதார குற்றவாளிக்கான பகுதியில் உள்ள சிறப்பு சிறை பகுதியில் உள்ள ஏழாம் எண் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதே சிறையில்தான் கடந்த ஆண்டு அவரது மகன் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே சிறையில் ப.சிதம்பரத்துக்கு மேற்கத்திய கழிவறையுடன் கூடிய தனி அறை தவிர வேறு எவ்வித சிறப்பு வசதியும் அளிக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிற கைதிகளைப் போன்று சிறை நூலகத்தையும், அங்குள்ள தொலைக்காட்சியையும் பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அறையில் ப.சிதம்பரம் அடைத்துவைக்கப்படுவார். காலை உணவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் வழங்கப்படும். சிதம்பரம் அங்குள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையேல், கேன்டீனிலிருந்து பாட்டில் தண்ணீரை வாங்கிக் கொள்ளலாம். இரவு உணவு மாலை 7 மணி முதல் 8 மணிக்குள் ரொட்டி, பருப்பு, சப்ஜி மற்றும் சோறு வழங்கப்படும்.

சிதம்பரம் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கும், அவருக்கு இஸட் பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிதம்பரம் வருகிற 16-ஆம் தேதி 74-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இடையில் ஜாமீன் மனு தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டால் அவர் பிறந்தநாளை சிறையிலேயே கழிக்க நேரிடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com