உத்தரபிரதேசத்தில் எந்தவொரு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் எந்தவொரு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை: யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேசத்தில் எந்தவொரு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேசத்தில் உள்ள எந்தவொரு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸுக்கு எதிராக, மக்கள் தங்களது பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறைக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்திய யோகி ஆதித்யநாத், காணொலி காட்சி மூலமாக பத்திரிகை ஆசிரியர்களுடன் பேசினார். அப்போது “மாநிலத்தின் எந்தவொரு கோவிட்-19 மருத்துவமனையிலும் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை. ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.எம் ஆக்ரா மற்றும் ஐஐடி பிஹெச்யு போன்ற நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தின் ஆக்ஸிஜன் தேவை, வழங்கல் மற்றும் விநியோகத்தை முறையாக கண்காணித்து வருகிறோம். அதனால் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, தேவைப்படுபவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் ஆக்ஸிஜன் தேவையில்லை. இது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சில ஆரம்பகட்ட சிக்கல்கள் இருந்தது. ஆனால் அவை விரைவாக சமாளிக்கப்பட்டன” என்று கூறினார்

மேலும்  "கொரோனாவை சாதாரண வைரஸ் காய்ச்சலாக எடுத்துக்கொள்வது மிகப்பெரிய தவறு. நானும் அதன் பிடியில் இருக்கிறேன். ஏப்ரல் 13 முதல் அனைத்து கோவிட் நெறிமுறைகளையும் பின்பற்றி என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். மாநிலத்தில் தற்போதைய கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை கடந்த முறையை விட 30 மடங்கு அதிகம். நாங்கள் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலைகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் இந்த அமைப்பு இல்லாமல் இருந்தது. எனவே  டிஆர்டிஓவின் சமீபத்திய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 18 ஆலைகள் உட்பட 31 புதிய ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்கும் பணி நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கும் பற்றாக்குறை இல்லை. அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடும் முதல் மாநிலம் உத்தரபிரதேசம்தான்”  என்று ஆதித்யநாத் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com