'எந்த ஆதாரமும் இல்லை...' சேகர் ரெட்டி மீதான வழக்கு முடித்துவைப்பு!

'எந்த ஆதாரமும் இல்லை...' சேகர் ரெட்டி மீதான வழக்கு முடித்துவைப்பு!

'எந்த ஆதாரமும் இல்லை...' சேகர் ரெட்டி மீதான வழக்கு முடித்துவைப்பு!
Published on

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சேகர் ரெட்டி வீட்டிலிருந்து, ரூ.24 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கை முடித்து வைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தொழிலதிபர் சேகர் ரெட்டி பழைய நோட்டுகளுக்கு பதிலாக, வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, சென்னையில் இருக்கும் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அவரது வீட்டில் இருந்து பெட்டி பெட்டியாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இது தொடர்பாக சேகர் ரெட்டி உள்பட அவரது நண்பா்கள் 6 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மொத்தம், ரூ.24 கோடி கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து, சேகர் ரெட்டி மற்றும் பிரேம்குமார், ஸ்ரீனிவாசுலு, ரத்தினம், ராமச்சந்திரன், பரம்சல் லோதா ஆகிய 6 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவர்கள் அனைவரும் ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சென்னை 11வது சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் சேகர் ரெட்டிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சிபிஐ மனு தாக்கல் செய்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜவஹா், சேகா் ரெட்டி உள்பட 6 போ் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த குற்றச்சாட்டின் கீழ் சேகர் ரெட்டி மீது மொத்தம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதில் ஏற்கனவே 2 வழக்குகளில் போதிய ஆதராங்கள் இல்லை என்று முடித்து வைக்கப்பட்டன. தற்போது அவர் மீதான 3வது வழக்கிலும் ஆதாரங்கள் இல்லை என்று அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com