குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு எதிரான வாக்குகள் தான் அதிகமாக இருக்கலாம் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.
நாட்டை வகுப்புவாதம் மூலம் பிளவுபடுத்த நினைக்கும் குறுகிய மனங்களுக்கு எதிரான யுத்தமாக ஜனாதிபதி தேர்தல் மாறியிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் டெல்லியில் 18 கட்சிகளின் எம்பிக்களை சந்தித்து ஆதரவு கோரினர். இந்த நிகழ்வில் பேசிய சோனியா, எண்ணிக்கை ரீதியாக பாஜக பெரும்பான்மை பெற்றிருந்தாலும் இந்த யுத்தத்தை கூடுமான வரை கடுமையான முறையில் நடத்தியே ஆக வேண்டும் என்றார். இதில் தோல்வி அடைவது பற்றி கவலையில்லை என்றும் சோனியாகாந்தி அப்போது தெரிவித்தார்.