கொரோனாவின் துயரம் : சடங்குகள், பூக்கள், சொந்தங்கள் இல்லா இறுதி ஊர்வலங்கள்..!

கொரோனாவின் துயரம் : சடங்குகள், பூக்கள், சொந்தங்கள் இல்லா இறுதி ஊர்வலங்கள்..!

கொரோனாவின் துயரம் : சடங்குகள், பூக்கள், சொந்தங்கள் இல்லா இறுதி ஊர்வலங்கள்..!
Published on

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சடங்குகள், பூக்கள், சொந்தங்கள் இல்லாமல் அமைதியான இறுதி ஊர்வலம் ஒன்று மும்பையில் சென்றது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பிற்காக மக்கள் வெளியே நடமாட முடியாமல் போலீஸார் தடுத்துள்ளனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியுள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலை ஏப்ரல் 14ஆம் தேதி வரை தொடரும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கனா மாநிலத்தில் சுகாதாரப் பணியாளர்களை மட்டுமே கொண்டு கொரோனாவால் உயிரிழந்தவரின் அடக்கம் நடைபெற்றது. ஹைதராபாத்தைச் சேர்ந்த 74 வயது முதியவர்தான் தெலங்கானாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு. இவரது உடல் கடந்த சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அப்போது உறவினர்கள் யாரும் இல்லை. ஏனெனில் உறவினர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 20 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், சடங்குகள், பூக்கள் என எதுவும் இல்லாமல் இறந்தவரின் இறுதி ஊர்வலம் ஒன்று மும்பையில் சென்றது. மும்பையைச் சேர்ந்த ஓட்டுநர் சசிகாந்த் காம்ப்ளே. இவரது தந்தை கடந்த வெள்ளியன்று இரவு சாப்பிடும் போது, திடீரென மூச்சு தலைக்கேறி திணறிப்போனார். உடனே அவரை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத்தொடர்ந்து சனிக்கிழமை அன்று அவரது உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஆனால், வழக்கமான முறைப்படி அங்கு எதுவுமே நடக்கவில்லை. பூஜை செய்யும் நபர்கள், பூக்கள், இசை, சொந்த பந்தங்கள் என எதுவுமின்றி அமைதியாக அந்த ஊர்வலம் சென்றிருக்கிறது.

ஊர்வலத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் சிலரே பங்கேற்றிருக்கின்றனர். அவர்களும் முகக்கவசம் அணிந்துகொண்டும், ஒரு மீட்டருக்கு மேல் இடைவெளி விட்டும் சென்றிருக்கின்றனர். இறந்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டு, 4 மணி நேரத்தில் அஸ்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காரியம் முடிந்த பின்னர் அதனை கரைக்கக்கூட முடியாத நிலை ஏற்படுமோ என சசிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தங்கள் தந்தையின் இறுதி ஊர்வலம் குறித்து பேசியிருக்கும் அவர், “ஊரடங்கு உத்தரவால் எங்கேயும் கடைகள் இல்லை. எனவே பூக்களை கூட வாங்க முடியவில்லை. நெய் மட்டும் எங்களால் வாங்க முடிந்தது. பானை கூட வாங்கவில்லை. நெருங்கியவர்கள் நிறைய பேர் வருவதாக சொன்னார்கள் நாங்கள் தான் தவிர்த்துவிட்டோம். இருப்பினும் சிலர் வந்துவிட்டனர். கூட்டத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக இ றுதி ஊர்வலம் முடிந்த சற்று நேரத்திலேயே எனது தம்பியும், அன்னையும் வீட்டிற்கு சென்றுவிட்டனர்’ என்றார்.

Courtesy : The Indian Express

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com