குஜராத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?: முதலமைச்சர் விஜய் ரூபானி விளக்கம்

குஜராத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?: முதலமைச்சர் விஜய் ரூபானி விளக்கம்

குஜராத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?: முதலமைச்சர் விஜய் ரூபானி விளக்கம்
Published on

குஜராத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை என அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது 5-ம் கட்ட
ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கால ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிக
அளவில் வெளியே நடமாடவில்லை.

குறிப்பாக, ஊரடங்கு முழுவீச்சில் அமல்படுத்தப்பட்ட ஏப்ரல் மாதத்தில் மக்கள் வீடுகளிலேயே இருந்தனர். அதன் பின்னர் தளர்வுகளுக்கு ஏற்ப மக்கள் நடமாட்டம் இருந்தது. இந்நிலையில் வரும் 30ம் தேதியுடன் ஐந்தாம்கட்ட ஊரடங்கும் முடியவுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் இந்தியாவின் கொரோனாவின் தாக்கமும் தற்போதுதான் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் குஜராத்தில் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை என அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள அவர், ஜூன்1 ம்தேதிக்கு பிறகு மக்கள் இயல்பு வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகின்றனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தாலும் கொரோனாவோடு வாழ மக்கள் பழகிக்கொண்டுள்ளனர். குஜராத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியில் உண்மையில்லை. அப்படி ஒரு திட்டம் அரசுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com