\
கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்கும் திட்டமில்லை: எடியூரப்பா

கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்கும் திட்டமில்லை: எடியூரப்பா

கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்க்கும் திட்டமில்லை: எடியூரப்பா
Published on: 

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்கும் திட்டமில்லை என்று அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை பாஜக கலைக்க முயன்று வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவர், எடியூரப்பா அதை மறுத்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, ‘’ ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று எங்கள் மேலிடம் தெரிவித்துள்ளது.

அதனால் நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். ஆனால், அவர்களாகவே மோதிக்கொண்டு அரசு தானாக கவிழ்ந்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது. உடனடியாக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஆசை பாஜகவுக்கு இல்லை. அதற்கான தேவையும் இப்போது இல்லை. சட்டப்பேரவையை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக சித்தராமையா கூறியது சரியல்ல’’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com