தொலைதூர பேருந்துகளில் பயணிகளுக்கு கன்ஃபார்ம் சீட்: கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி

தொலைதூர பேருந்துகளில் பயணிகளுக்கு கன்ஃபார்ம் சீட்: கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி
தொலைதூர பேருந்துகளில் பயணிகளுக்கு கன்ஃபார்ம் சீட்: கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி

கேரளாவில் நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளில் பயணிகளை நிற்க வைத்து கொண்டு செல்லக்கூடாது என கேரள மாநில சாலை போக்குவரத்துக் கழகத்திற்கு கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலம் பாலாவில் உள்ள நுகர்வோர் மையம் சார்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கேரளாவில் உள்ள பேருந்துகளில் அதிக அளவில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. மோட்டார் வாகனச் சட்டப்படி விரைவு பேருந்துகளில் பயணிகளை நிற்க வைத்து கொண்டு செல்லக்கூடாது. இவர்கள் கட்டணத்தையும் அதிகமாக வசூலித்துவிட்டு பயணிகளையும் நிற்கவைத்து அழைத்துச் செல்கின்றனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கேரளா சாலைக் போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுவாக குறைந்த அளவிலான தூரங்களுக்கு செல்லும் பேருந்துகளில் மட்டும் பயணிகள் நின்றுகொண்டு பயணிப்பதாக கூறினார். அப்போது பேசிய நீதிபதிகள், நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளில் பயணிகளின் இருக்கையை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவர்களை நின்று செல்ல அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தனர். அதிகப்படியான விலையை கொடுத்துவிட்டு பயணிகள் நின்றுசெல்வதா..? என தெரிவித்த நீதிமன்றம், பயணிகள் பேருந்தில் அமர்ந்து செல்வதுதான் அவர்களின் உரிமை எனவும் தெரிவித்தனர். எனவே அதிவிரைவு மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் பயணிகளை நிற்க வைத்து கொண்டு செல்லக் கூடாது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துவிட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com