\
ஐசியூ இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஐசியூ இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஐசியூ இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
Published on

தீவிர சிகிச்சை பிரிவு வசதி இல்லாமல் மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த பிஜோய் குமார் சின்ஹா என்பவர் தனது மனைவிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனையில் ஐசியூ இல்லாததால் அவர் உயிரிழந்ததாக, கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு பல்வேறு கட்டங்களை தாண்டி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ்குமார் கோயல் மற்றும் யு.யு. லலித் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. புகார்தாரர் சின்ஹா இறந்துவிட்டதால் வழக்கை நடத்திய அவரது மகன் சவுமிக்குக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு புகாருக்குள்ளான மருத்துமனைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com