‘என்னை யாராலும் அழிக்க முடியாது’ - நித்தியானந்தாவின் புது வீடியோ
பரபரப்பான தகவல்களைக் கூறிவரும் நித்தியானந்தா, கடவுளின் அருள் இருப்பதனால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் ஒட்டுமொத்த காவல்துறையும் குழம்பிக் கொண்டிருக்கும் சூழலில், எங்கோ ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு, எதற்குமே அஞ்சாமால், ஆன்லைனில் கூலாக ஆன்மீக சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. பாலியல் புகார், கடத்தல் புகார், கொலை குற்றச்சாட்டு என எட்டுத்திசைகளிலும் பிரச்னைகள் சூழந்து வந்தாலும், நித்தமும் அசராத நித்தியானந்தா, ஆன்லைன் வாயிலாக குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து வருகிறார்.
புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர், 2003ஆம் ஆண்டில் இருந்தே சிலர் தம்மை அழிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். கடவுளின் அருளால் தான் தனது வளர்ச்சி மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக எதிர்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக பதிலளித்திருக்கிறார். ஈக்வடார் நாட்டில் உள்ள தீவை விலைக்கு வாங்கியிருக்கும் நித்தியானந்தா, அங்கு கைலாஷா என்கிற தனி நாட்டை உருவாக்கும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.