இந்தியா
வங்கிக்கு செல்லாமலேயே ஓய்வூதிய கணக்கு தொடங்கலாம்
வங்கிக்கு செல்லாமலேயே ஓய்வூதிய கணக்கு தொடங்கலாம்
மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதிய கணக்கு தொடங்க வங்கிகளுக்கு அலைய வேண்டிய தேவை இல்லை என மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுநாள் வரை பணி ஓய்வுக்கான உத்தரவானது ஓய்வூதியம் அளிக்கும் வங்கிக்கு அனுப்பும் முறை கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஆவணங்கள் காணாமல் போதல் போன்ற பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றை சரி செய்யும் வகையில், பணியாளர் ஓய்வுபெறும் போதே அவரிடம் பணி ஓய்வுக்கான உத்தரவு நகல் வழங்கப்படும் என்றும், அதேபோல் சம்பந்தப்பட்ட வங்கிக்கும் கணக்கு தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடும் எனவும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.