\
"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை"- மத்திய அரசு

"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை"- மத்திய அரசு

"ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை"- மத்திய அரசு
Published on: 

ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம், ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது விசாரணை நிலுவையில் உள்ளது.

இதில் மத்திய அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ரஃபேல் விவகாரத்தில் தலையிட உறுதியான காரணங்கள் எதுவும் இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருப்பதை சுட்டிய காட்டிய மத்திய அரசு, அதில் சிபிஐ விசாரணைக்கு இடமில்லை என தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரும் மனுக்களை தள்ளுபடி, செய்ய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com