இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை: ஆன்லைன் மூலம் 18 சேவைகள் அறிமுகம்!

இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை: ஆன்லைன் மூலம் 18 சேவைகள் அறிமுகம்!

இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை: ஆன்லைன் மூலம் 18 சேவைகள் அறிமுகம்!
Published on

எல்எல்ஆர், வாகன பதிவு உள்ளிட்ட 18 விதமான சேவைகள் முழுவதுமாக ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளலாம். ஆர்டிஓ அலுவலகத்துக்கு செல்லாமலேயே இந்த சேவைகளை தற்போது பெற முடியும்.

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பாக சில சேவைகளை இனி ஆன்லைன் மூலமாகவும் பெறலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், ஆதார் மூலமாக ஓட்டுநர் உரிமர் புதுப்பித்தல், மாற்று வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை ஆர்.டி ஓ அலுவலகத்திற்கு செல்லாமலேயே பெற முடியும்.

ஆன்லைன் மூலம் பெறக்கூடிய 18 வகையான சேவைகள் விவரம்:

1. பழகுநர் உரிமம்(எல்எல்ஆர்)

2. ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு(வாகனத்தை இயக்கிக்காட்டுதல் தேவையில்லை என்றால்)

3. டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ்

4. ஓட்டுநர் உரிமம், ஆர்சி புக்கில் முகவரி மாற்றுதல்

5. சர்வதேச அளவில் ஓட்டுநர் உரிமத்துக்கு அனுமதி

6. வாகன உரிமத்தை ஒப்படைத்தல்

7. வாகனத்துக்குத் தற்காலிகமாகப் பதிவெண் பெற விண்ணப்பித்தல்

8. முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட வாகனத்துக்கு பதிவெண் பெற விண்ணப்பித்தல்

9. வாகனத்துக்கு டூப்ளிகேட் பதிவெண் பெற விண்ணப்பித்தல்

10. என்ஓசி சான்றிதழ் பெற விண்ணப்பித்தல்

11. வாகனத்தின் உரிமையாளரை மாற்றுவதற்கு விண்ணப்பித்தல்

12. வாகன ஆர்சி புத்தகத்தில் முகவரியை மாற்றுவது குறித்து விண்ணப்பித்தல்

13. அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி பெற விண்ணப்பம் பதிவு செய்தல்

14. உயர் அதிகாரிகளுக்கு வாகனத்தைப் பயன்படுத்தப் பதிவு செய்ய விண்ணப்பித்தல்

15. வாகனத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்தல்

16. வாகனத்தை வாடகைக்கு எடுத்த காலம் முடிந்தபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தல்

17. வாகனத்தின் உரிமத்தை மாற்றுவது குறித்து விண்ணப்பித்தல்

18. தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய வாகன பதிவெண் பெற விண்ணப்பித்தல்

மேற்கூறிய சேவைகளை ஆன்லைன் மூலமாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com