மகாராஷ்டிராவில் பொதுமுடக்கம் இல்லை - கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு

மகாராஷ்டிராவில் பொதுமுடக்கம் இல்லை - கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு
மகாராஷ்டிராவில் பொதுமுடக்கம் இல்லை - கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு

மாநிலத்தில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை அல்லது மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை தொடர்பான நிலைமை மோசமடைந்தால் மட்டுமே பொதுமுடக்கம் விதிக்கும் முடிவு எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், தற்போது பொதுமுடக்கம், ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என மகாராஷ்டிர சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,538 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அறிவிப்பினை வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை “இப்போது லாக்டவுனைப் பற்றி எந்தப் பரிசீலனையும் இல்லை. மாநிலத்திற்கான மருத்துவ ஆக்ஸிஜன் தேவை ஒரு நாளைக்கு 800 மெட்ரிக் டன்களைத் தாண்டிய பிறகு அல்லது மருத்துவமனைகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் படுக்கைகள் நிரம்பிய பிறகு, மகாராஷ்டிரா அரசாங்கம் பொதுமுடக்கம் குறித்து பரிசீலிக்கும்” என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com