\
வரதட்சணை கொடுமை வழக்கில் உடனடி கைது இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை கொடுமை வழக்கில் உடனடி கைது இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை கொடுமை வழக்கில் உடனடி கைது இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி
Published on

பெண்களுக்கு எதிரான வரதட்சணை கொடுமை வழக்கில் உடனடியாக யாரையும் கைது செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இந்திய வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின்படி பெண்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யலாம். ஆனால், இந்த சட்டம் சில சமயங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், வரதட்சணை கொடுமை வழக்குகளில் உடனடியாக யாரையும் கைது செய்யக்கூடாது என்றும், அந்தந்த மாவட்டங்களில் குடும்ப நல அமைப்புகள் அமைத்து அதன் அறிக்கையை பெற்று, விசாரணை நடத்திய பிறகே கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com