\
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
Published on: 

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் அளித்துள்ளார்.

கொங்கு நாடு குறித்து தமிழக பாஜகவினர் சிலர் கடந்த மாதத்தில் பேசினர். இது தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து தமிழ்நாடு இரண்டாக பிரிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருப்பதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு எம்பிக்கள் எஸ்.ராமலிங்கம், பாரிவேந்தர் ஆகியோர் எழுத்துபூர்வமாக கேட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.

அதில் "தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போதும் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை" என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெளிவுப்படுத்தியுள்ளார். இதனையடுத்து தமிழ்நாட்டின் கொங்கு நாட்டு சர்ச்சைக்கு மத்தி அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com