விரைவில் ரயில் பயண இலவச காப்பீடு ரத்து..?

விரைவில் ரயில் பயண இலவச காப்பீடு ரத்து..?

விரைவில் ரயில் பயண இலவச காப்பீடு ரத்து..?
Published on

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச காப்பீடு விரைவில் நிறுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

ஆன்லைன் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு ரயில் பயணிகளுக்கு இலவச ரயில் பயண காப்பீட்டை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது. அதன்படி எதிர்பாராதவிதமாக நடைபெறும் ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்படுகிறது. ரயில் விபத்து மூலம் உடல் ஊனம் ஏற்படுபவர்களுக்கு ரூபாய் 7.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும் வழங்கப்படுகிறது. காப்பீட்டிற்காக ஐஆர்சிடிசிக்கு பயணிகள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச காப்பீடு விரைவில் நிறுத்தப்படும் என ரயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இதற்காக வெப்சைட் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ரயில் பயணிகள் டிக்கெட்டை புக் செய்யும் போது, காப்பீடு எடுக்கிறீர்களா..? வேண்டாமா..? என்று கேட்கிற வசதியும் விரைவில் செய்து கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் காப்பீட்டிற்கான தொகை எவ்வளவு எனத் தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com