
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் நாட்டில் எந்த விழாக்களுக்கும் அனுமதியில்லை என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனினும், இந்த மாதத்தில் பண்டிகை விழாக்கள் நிறைய இருக்கிறது. ஒருவேளை ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், இம்மாதத்தில் எந்தவொரு விழாவுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இம்மாத்தில் கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை, ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, மலையாள புத்தாண்டான விஷு ஆகியவை வருகிறது. இந்நிலையில் ஊரடங்கின்போது இம்மாதத்தில் எந்தவொரு விழாக்களுக்கும் அனுமதியில்லை என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.