“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..!

“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..!
“3 படங்களின் வசூல் ரூ.120 கோடி; நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை”- மத்திய அமைச்சர்..!

அக்டோபர் 2-ஆம் தேதி வெளியான மூன்று படங்கள் ரூ.120 கோடி வசூலை ஈட்டியுள்ளதால் நாட்டில் பொருளாதார மந்தநிலை என்பது இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பொருளாதார மந்தநிலை தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதனை சிரிப்புடனே எதிர்கொண்ட மத்திய அமைச்சர் பொருளாதார மந்தநிலை என்ற கூற்றை நிராகரித்தார். காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி வெளியான 3 படங்களை சுட்டிக்காட்டி பேசிய மத்திய அமைச்சர் அப்படங்கள் ரூ.120 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தெரிவித்தார். எனவே நாட்டின் பொருளாதாரம் போதுமான நிலையில் இருப்பதாகவும், மந்தநிலை இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு ஜூன் மாத காலாண்டில் 5 சதவீதமாக குறைந்தது. பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய அரசாங்கம் பல்வேறு துறை சார்ந்த தீர்வுகளை வழங்கி வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நாட்டில் பொருளாதார மந்தநிலை என்பது இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com