அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு அலோபதி முறையே சிறந்தது : பாபா ராம்தேவ்

அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு அலோபதி முறையே சிறந்தது : பாபா ராம்தேவ்
அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சைகளுக்கு அலோபதி முறையே சிறந்தது : பாபா ராம்தேவ்

அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அலோபதி மருத்துவமுறை சிறந்தது என்பதில் சந்தேகமில்லை என்று பாபா ராம்தேவ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய பாபா ராம்தேவ், "எங்களுக்கு எந்தவொரு அமைப்பினருடனும் பகை இருக்க முடியாது. மேலும் நல்ல மருத்துவர்கள் அனைவரும் இந்த பூமிக்கு கடவுள் அனுப்பிய தூதர்கள். அவர்கள் இந்த கிரகத்திற்கு ஒரு பரிசு. ஆனால், மருந்துகளின் பெயரால் யாரும் துன்புறுத்தப்படக்கூடாது என்றும், தேவையற்ற மருந்துகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு அலோபதி சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உயிருக்கு ஆபத்தான பிற நோய்கள், குணப்படுத்த முடியாத கோளாறுகள் பண்டைய நடைமுறைகள் மூலம் குணப்படுத்தப்படலாம் என யோகா மற்றும் ஆயுர்வேதத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது"என்று தெரிவித்தார்.

பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவ முறையை விமர்சித்த தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து விலகி விரைவில் தடுப்பூசி போடுவதாக அறிவித்திருக்கிறார். கடந்த மாதம் யோகா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை கொரோனாவை குணப்படுத்த உதவுவதால் தடுப்பூசி போடத் தேவையில்லை என்று சர்ச்சையைத் தூண்டினார் பாபா ராம்தேவ், மேலும் கோவிட் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. மத்திய சுகாதார அமைச்சரும் இக்கருத்தை வாபஸ் வாங்குமாறு ராம்தேவுக்கு கடிதம் எழுதினார்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com