\
”கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்த இந்தியர்கள் தரவுகள் இல்லை” - மத்திய அரசு

”கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்த இந்தியர்கள் தரவுகள் இல்லை” - மத்திய அரசு

”கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்த இந்தியர்கள் தரவுகள் இல்லை” - மத்திய அரசு
Published on

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கையோ அல்லது முதலீடு தொகை அளவு குறித்த தரவுகளோ மத்திய அரசிடம் இல்லை என நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

’கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்பாக மத்திய அரசு கணக்கெடுத்து உள்ளதா?’ என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ”கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும் இந்தியர்களின் விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை. மேலும், அவர்கள் முதலீடு செய்துள்ள மதிப்பின் அளவீடு குறித்தும் மத்திய அரசிடம் எந்தத் தகவலும் இல்லை" என மத்திய நிதியமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கிரிப்டோகரண்சிகள் மூலம் வரும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும்” எனக் கூறியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com