தொடங்கியது மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம்!

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் - அவை கூடியது
நம்பிக்கை இல்லா தீர்மானம் - அவை கூடியதுபுதிய தலைமுறை

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்திருந்தார். சூரத் நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது.

Rahul Gandhi
Rahul GandhiTwitter

இதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனை அடுத்து ராகுலின் தகுதி நீக்கத்தை ரத்து செய்த மக்களவைச் செயலகம் அவர் மீண்டும் எம்.பி.யாக தொடர்வார் என தெரிவித்தது. நேற்று ராகுல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் - அவை கூடியது
நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாக வந்த ராகுல் காந்தி!

மறுபுறம் மணிப்பூர் கலவரத்திற்கு பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இவ்விவகாரத்தில் உள்துறை அமைச்சர் பதிலளிப்பார் என்று ஆளும் தரப்பு கூறிய நிலையில் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மனத்தை தாக்கல் செய்ய முடிவெடுத்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்த பின், தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி அதாவது இன்று நடைபெறும் என மக்களவையில் அறிவிக்கப்பட்டது.

மக்களவை ஒத்திவைப்பு
மக்களவை ஒத்திவைப்பு

இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று இப்போது தொடங்கியுள்ளது. விவாதத்தில் முதலில் ராகுல் பேசுவார் என சொல்லப்பட்டது. ஆனால் கௌரவ் கோகோய்தான் (காங்.) முதலில் பேசினார்.

மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்திருப்பதால், வட கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரை பேசவைக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாகவும், அதனாலேயே கௌரவ் கோகோய் பேச வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இவர், அசாம் மாநில காங். எம்.பியாவார். விவாதத்தின் மீது எந்தெந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச உள்ளனர் என்ற பட்டியலும் சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

எம்.பி கௌரவ் கோகோய் பேசுகையில், “பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை? ஏன் இவ்வளவு நாள் பேசவில்லை? மணிப்பூர் வன்முறை குறித்து வெறும் 30 விநாடிகள் மட்டுமே பேசியுள்ளார் பிரதமர். மணிப்பூர் முதல்வரை மத்திய அரசு காப்பாற்றிவருகிறது” என கடுமையாக சாடினார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மணிப்பூர் கலவரம் பிரதான அம்சமாக இருக்கும் என்றாலும், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வேலை வாய்ப்பு பிரச்சனை போன்ற பல்வேறு விவகாரங்களும் இதில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் நாளையும் விவாதம் நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கங்களை அளிப்பார் என தெரிகிறது.

parliament
parliamentpt web

அவையில் ஆளும் கட்சி உறுப்பினர்களே பெரும்பான்மையாக உள்ள நிலையில் பிஜூ தனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகள் அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன.

நம்பிக்கை இல்லா தீர்மானம் - அவை கூடியது
15 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்ட பிரதமர் யார் தெரியுமா? வரலாறு இதுதான்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com