போராட கண்மூடித்தனமாக தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர், போட் கிளப் மற்றும் இந்தியா கேட் ஆகிய பகுதிகளில் மக்கள் அல்லது மற்றவர்கள் போராட்டம் நடத்துவதற்கு கண்மூடித்தனமாக , முழுமையாக , போராட்டம் நடத்த தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் அமைதியாக வாழ்வதற்கும் , அதில் பாதிப்பு ஏற்படும் போது போராடவும் உரிமை உள்ளது. அது இரண்டையும் எப்படி சமமாக கையாள்கிறோம் என்பதில் மட்டுமே கவனம் தேவையே தவிர , எந்த காரணமும் இன்றி அமைதியான போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்
வழக்கு ஒன்றை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதித்தது. இதனை எதிர்த்து மஸ்தூர் கிஷான் ஷக்தி சங்கேதன் என்ற அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷன் அமர்வு இந்த தடையை நீக்கியதோடு , போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க உத்தரவிட்டனர்.