குழந்தையின் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்

குழந்தையின் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்

குழந்தையின் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்
Published on

உத்தர பிரதேசத்தில் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால், 7 மாத குழந்தையின் சடலத்தை தோளில்‌ சுமந்து சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. 
கௌசாம்பி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் குமார் என்பவரின் 7 மாதக்குழந்தையான பூனம், உடல் நலக்குறைவால் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் மருத்துவச் செலவுக்கான பணத்தினை ஏற்பாடு செய்வதற்காக வெளியூர் சென்ற ஆனந்த் குமார், குழந்தையைக் கவனித்துக் கொள்ளும்படி, தனது உறவினரான பிரிஜ் மோகனிடம் கூறிவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி அந்த 7 மாத குழந்தை உயிரிழந்தது. இந்த சூழலில் குழந்தையின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்திருக்கிறது. இதனை அடுத்து குழந்தையின் உடலை தோளில் சுமந்தபடி பிரிஜ் மோகன் சைக்கிளில் கொண்டு சென்றார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com