பேத்தியின் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்

பேத்தியின் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்

பேத்தியின் உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்
Published on

மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால், இறந்த பேத்தியின் உடலை அவரது தாத்தா தோளில் சுமந்து சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

அரியானா மாநிலம், பரிதாபாத்தை சேர்ந்த சிறுமி லட்சுமி. சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கேட்ட பணத்தை தர முடியாததால் அருகில் உள்ள அரசுமருத்துவமனையில் லட்சுமி நேற்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் காலதாமதம் செய்ததால் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து லட்சுமியின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்ல, மருத்துவமனை நிர்வாகத்திடம் அவரின் தாத்தா ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் பேத்தியின் உடலை தனது தோளில் சுமந்து கொண்டு அவர் சென்றுள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் சிலர் லட்சுமியின் உடலை வாகனத்தில் ஏற்றி செல்ல பணம் கொடுத்து உதவினர். ஒடிசாவில் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் தற்போது அரியானாவில் நடைபெற்றதால் அப்பகுதியில் அதிர்ச்சியடைந்தனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com