ட்ரெண்டாகும் குழந்தை பாதுகாப்பு குறித்த நிவின் பாலியின் வீடியோ

ட்ரெண்டாகும் குழந்தை பாதுகாப்பு குறித்த நிவின் பாலியின் வீடியோ

ட்ரெண்டாகும் குழந்தை பாதுகாப்பு குறித்த நிவின் பாலியின் வீடியோ
Published on

பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளில் இருந்து குழந்தைகள் எப்படி தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்கிற நடிகர் நிவின் பாலியின் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

கேரள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள வீடியோவில், பிரபல நடிகர் நிவின் பாலி இடம்பெற்றுள்ளார். இதில் தவறான நபர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்வது பற்றி குழந்தைகளுக்கு நிவின் பாலி விளக்குகிறார்.

NO.GO.TELL என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் வீடியோவில் GOOD TOUCH மற்றும் BAD TOUCH குறித்தும், ஒருவர் தவறாக நடந்து கொண்டால் குழந்தைகள் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் நிவின் பாலி எடுத்துரைக்கிறார். குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வெளியாகி இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com