\
நிவர் புயல் : இருளில் மூழ்கியது புதுச்சேரி

நிவர் புயல் : இருளில் மூழ்கியது புதுச்சேரி

நிவர் புயல் : இருளில் மூழ்கியது புதுச்சேரி
Published on: 

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. புதுச்சேரிக்கு வடக்கே அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை மைய அதிகாரிகள் கணித்திருந்தனர். 

அதன் எதிரொலியாக சென்னை உட்பட வட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகே உள்ள மரக்காணத்தில் கரையை கடக்க உள்ள நிலையில் ஒட்டுமொத்த  புதுச்சேரியிலும் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. 

புயல் கரையை கடக்க இருப்பதால், மின்தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com