\
நிவர் புயல் தாக்கிய புதுச்சேரியின் கள நிலவர புகைப்படங்கள்! - சிறப்புத் தொகுப்பு

நிவர் புயல் தாக்கிய புதுச்சேரியின் கள நிலவர புகைப்படங்கள்! - சிறப்புத் தொகுப்பு

நிவர் புயல் தாக்கிய புதுச்சேரியின் கள நிலவர புகைப்படங்கள்! - சிறப்புத் தொகுப்பு
Published on

நிவர் புயலால் புதுச்சேரி பகுதியின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

தீவிரப் புயலாகவும், அதி தீவிரப் புயலாகவும் வலுவடைந்து வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த 'நிவர்', நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை மூன்று மணி நேரம் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர் தீவிரப் புயலாக வலுவிழந்து கரையை கடந்தது.

இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. மேலும் மழையும் பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாய்ந்துள்ள மரங்களை போலீசாரின் உதவியுடன் பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

புகைப்படங்கள்: எல்லுச்சாமி கார்த்திக் (செய்தியாளர்)

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com