\
4 மணிக்கு பீகார் முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ் குமார்

4 மணிக்கு பீகார் முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ் குமார்

4 மணிக்கு பீகார் முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ் குமார்
Published on

பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் மாலை 4 மணி அளவில் பதவயேற்கிறார்.

பாஜக தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர். பாஜக சார்பில் தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. தர்கிஷோர் பிரசாத் பாஜக சட்டப்பேரவை குழுவின் தலைவராகவும் ரேணு தேவி சட்டப்பேரவை குழு துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக முந்தைய நிதிஷ் குமார் அமைச்சரவையில் துணை முதலமைச்சராக இருந்த சுஷில் மோடி, தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புக்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்தார். தன்னிடம் இருந்து கட்சித் தொண்டர் என்ற பொறுப்பை மட்டும் பறிக்க முடியாது என்றும் சுஷில் மோடி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com