பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் இனி சுங்க கட்டணம் - எப்போது முதல் அமலுக்கு வரும்?

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் இனி சுங்க கட்டணம் -  எப்போது முதல் அமலுக்கு வரும்?

தொழில்துறை அமைப்பான சிஐஐ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் தற்போதிய சுங்க வருவாய் 40 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் 1.40 லட்சம் கோடியாக உயரும் என தெரிவித்துள்ளார். மேலும், தானியங்கி நம்பர் பிளேட் ரீடர் கேமராக்கள் மூலம், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் ஜிபிஎஸ் கருவி உதவியுடன் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறை அடுத்த 6 மாதங்களில் இந்தியாவில் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ள நிதின் கட்கரி, இதனால் மக்களின் பணம் மற்றும் நேரம் சேமிக்கப்படும் என கூறியுள்ளார்.

முன்னதாக, சுங்கச்சாவடிகளில் நிலையான கட்டண முறையிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும், இதன் காரணமாக டோல் நெடுஞ்சாலையின் பயன்பாடு விரைவில் மலிவானதாக மாறும். நெடுஞ்சாலையில் குறுகிய தூரம் அல்லது நீண்ட தூரம் என அனைவரும் ஒரே தொகையை சுங்கச்சாவடியில் செலுத்த வேண்டும். அதாவது, 10 கி.மீ., பயணம் செய்பவர்கள், 50 கி.மீ., பயணம் செய்பவர்கள், இருவரும் ஒரே தொகையை செலுத்த வேண்டும். தற்போது, சுங்கச்சாவடியில் ஒருவர் 10 கிலோமீட்டர் தூரம் சென்றால், 75 கிலோமீட்டர் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுவரை சுங்க கட்டணம் செலுத்தாதவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான விதிமுறை இல்லை என்றும், ஆனால் கட்டணம் தொடர்பான மசோதா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் நிதின் கட்கரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com