காவிரி - கோதாவரி நதிகள் விரைவில் இணைப்பு : நிதின் கட்கரி அறிவிப்பு
காவிரி நதியையும் கோதாவரி நதியையும் இணைக்கும் முக்கிய நதி நீர் இணைப்புத்திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அமராவதியில் பாஜக தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் பங்கேற்றார். அதில் பேசிய நிதின் கட்கரி, காவிரி நதியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. ஆனால் கோதாவரி நதியில் இருந்து ஆண்டு தோறும் ஆயிரத்து 100 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே கோதாவரியை காவிரியுடன் இணைத்து, கோதாவரி நதி நீரை தமிழகத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால் நான்கு தென் மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர் கூறினார். இந்த கூட்டத்தில் ஆந்திர பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.