விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? - நிதி ஆயோக் கேள்வி

விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? - நிதி ஆயோக் கேள்வி
விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? - நிதி ஆயோக் கேள்வி

விவசாயிகளின் பிரச்னைகளுக்கு கடன் தள்ளுபடி மூலம் தீர்வு கண்டுவிட முடியாது என நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் இதைத் தெரிவித்தார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகள் பிரச்னைகளை கையில் எடுத்து மத்திய அரசுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார். இதற்கிடையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் விவசாயக் கடன் அனைத்தையும் பிரதமர் மோடி தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதை அவர் செய்யும் வரை தூங்க விடப் போவதில்லை என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார். 

இந்நிலையில், விவசாயிகளின் பிரச்னைகளுக்கு கடன் தள்ளுபடி மூலம் தீர்வு கண்டுவிட முடியாது என நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் இதைத் தெரிவித்தார். “கடன் தள்ளுபடி ஓரளவு மட்டுமே விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடியது. வலி நிவாரணிதான். நிரந்தரமாக அவர்களின் துயரை தீர்க்க உதவாது. விவசாய முறைகளை நவீனப்படுத்த வேண்டும். தனியார் முதலீடுகள் விவசாய துறையில் செய்யப்பட வேண்டும்” என்று அவர் கூறினார். 

நிதி ஆயோக் உறுப்பினரும், விவசாய கொள்கை ஆய்வாளருமான ரமேஷ் சந்த் கூறுகையில், “குறைவான வளர்ச்சியடைந்த மாநிலங்களில், 10-15 சதவீத விவசாயிகளே கடன் தள்ளுபடியால் பயன் அடைகிறார்கள். சில விவசாயிகள் தனியார் நிறுவனங்களில் கடன் வாங்குகிறார்கள். பெருவாரியான மாநிலங்களில் 25 சதவீதம் விவசாயிகள் கூட நிறுவன கடன்களை பெறுவதில்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com