நித்தியானந்தா மீது அதிரவைக்கும் அடுக்கடுக்கான புகார்.. ஆசிரம உண்மையின் பின்னணி..?

நித்தியானந்தா மீது அதிரவைக்கும் அடுக்கடுக்கான புகார்.. ஆசிரம உண்மையின் பின்னணி..?

நித்தியானந்தா மீது அதிரவைக்கும் அடுக்கடுக்கான புகார்.. ஆசிரம உண்மையின் பின்னணி..?
Published on

ஜனார்த்தன ஷர்மா என்பவர் நித்தியானந்தா மீது பல அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

நித்தியானந்தா தொடர்பான தகவல்களை பெற வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியை குஜராத் காவல்துறையினர் நாடியுள்ளனர். நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் தங்களுக்கு‌ கிடைக்கப் பெறவில்லை என அம்மாநில காவல்துறை கூறியுள்ளது. இந்த நிலையில், ஆசிரமத்துக்கு நிதி திரட்டும் பணிகளில் குழந்தைகளை நித்தியானந்தா ஈடுபடுத்தியது உண்மைதான் என அங்கிருந்து மீட்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார். 

நித்தியானந்தாவுக்கும், ‘மா நித்யானந்த மாயி சாமி’ என்றழைக்கப்படும் நடிகை ரஞ்சிதாவுக்கும் தெரியாமல் ஆசிரமத்தில் ஏதும் நடக்காது என்கிறார் ஜனார்த்தன ஷர்மா. அப்படி என்னதான் நடக்கிறது நித்தியானந்தா ஆசிரமத்தில் என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார் அங்கிருந்து மீட்கப்பட்ட ஜனார்த்தன ஷர்மாவின் இளைய மகள். அவர் கூறும் தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகத்தில் உள்ளன.

‌“நித்தியானந்தா ‌பெண்களுக்கு மட்டுமல்ல; ஆண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கிறார். அவரால் வெளிநாட்டவர் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட வேண்டும். நித்யானந்தா ஆசிரமத்தில் இருப்பவர்களையும் அவரைப்போல் மாற்ற முயற்சிக்கிறார்” என்று ஜனார்த்தன ஷர்மா புகார் தெரிவித்துள்ளார்.

இந்த ஆசிரம நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி ஒருவர்,  “ஆசிரமத்தில் கல்வி முறையாக கற்பிக்கப்படவில்லை. நித்தியானந்தாவின் பெருமைகளைப் பேசி ஆசிரமத்துக்கு நிதி திரட்ட வேண்டும். ஒருவரின் கண்ணைப் பார்த்து அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிவது எப்படி என நித்தியானந்தா கற்றுக் கொடுத்துள்ளார். அதைப் பயன்படுத்தி நிதி திரட்டுவோம். ஒருவரிடம் குறைந்தப்பட்சம் ரூபாய் 3 லட்சம் ஆவது திரட்ட வேண்டும். அதிக அளவாக ரூபாய் 8 கோடி வரை நிதி திரட்டியுள்ளோம். நிதி இல்லை என்றால் நிலத்தை வாங்க வேண்டும். இதுவரை 700 ஏக்கர் வரை நிலத்தை வாங்கிக் கொடுத்துள்ளோம். நித்தியானந்தாவின் பெருமைகளை பேச வைத்து வீடியோ எடுப்பார்கள். அதற்காக நகைகளை போட்டுக்கொண்டு அதீத ஒப்பனையுடன் வீடியோவில் நடிப்போம். நடனமாடுவோம்” எனப் பாதிக்கப்பட்ட சிறுமி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ எனது சகோதரிகளால் ஆசிரமத்திலிருந்து வெளியேற முடியவில்லை. நித்தியானந்தா சொல்வதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், வேறு வழியில்லை. நித்தியானந்தா கூறியதாலேயே எனது பெற்றோர் மீது குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டனர். நான் அங்கிருக்கும் போது என்னையும் அவ்வாறு செய்யும்படி கூறினார்கள். நான் மறுத்துவிட்டே‌ன்” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com