Malhar Certification
Malhar Certificationமுகநூல்

ஹலால் போல் 'மல்ஹார்' சான்று - மகாராஷ்டிரா அரசு போட்ட உத்தரவு!

முற்​றி​லும் இந்​துக்​களால் நடத்​தப்​படும் சரி​யான ஆட்​டிறைச்சி கடைகளை அடை​யாளம் காண ‘மல்​ஹர்’ சான்​றிதழ் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.
Published on

ஹலால் முறையை போலவே, 'மல்ஹார்' சான்று வழங்கும் நடைமுறையை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ராணே திங்கள்கிழமை அன்று வெளியிட்ட அறிவிப்புதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “ மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள இந்து சமு​தா​யத்​தினருக்​காக முக்​கிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. முற்​றி​லும் இந்​துக்​களால் நடத்​தப்​படும் சரி​யான ஆட்​டிறைச்சி கடைகளை அடை​யாளம் காண ‘மல்​ஹர்’ சான்​றிதழ் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. அத்​துடன் இறைச்​சி​யில் கலப்​படம் இல்லை என்​பதை உறுதி செய்​ய​வும் இது உதவும். இந்​துக்​கள் மல்​ஹர் சான்​றிதழ் பெற்ற கடை​யில் ஆட்​டிறைச்சி வாங்க வேண்​டும். இந்த சான்​றிதழ் பெறப்​ப​டாத கடை​யில் ஆட்​டிறைச்சி வாங்​கு​வதை தவிர்க்க வேண்​டும். மேலும் இந்த முயற்சி இந்து சமு​தா​யத்​தைச் சேர்ந்த இளைஞர்​கள் பொருளாதார ரீதி​யாக முன்​னேற்​றம் அடைய​வும் உதவும். ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஜட்கா இறைச்சி சப்ளையர்களுக்கான சான்றிதழ் தளம், MalharCertification.com உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விற்பனை நிலையங்கள் 100 சதவீதம் இந்துக்கள் நடத்துவது என்றும் ரானே கூறியுள்ளார்.

Malhar Certification
இஸ்ரேலிய பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்!

ஹலால் இறைச்சிக்கு கடைபிடிக்கப்படும் அதே விதிகள் தான், 'மல்ஹார்' சான்றுக்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், ஹிந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு மட்டுமே இந்த சான்று வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com