''முதலைத்தோல்...வைரக்கற்கள்...'': நீட்டா அம்பானியின் அசரவைக்கும் ஹேண்ட்பேக் விலை!

''முதலைத்தோல்...வைரக்கற்கள்...'': நீட்டா அம்பானியின் அசரவைக்கும் ஹேண்ட்பேக் விலை!

''முதலைத்தோல்...வைரக்கற்கள்...'': நீட்டா அம்பானியின் அசரவைக்கும் ஹேண்ட்பேக் விலை!
Published on

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானியின், வைரக் கற்கள் பதிக்கப்பட்ட ஹேண்ட்பேக் தற்போது வைரலாகி வருகிறது.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 13ஆவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக வளம் வரும் முகேஷ் அம்பானியின் மனைவி தான் நீட்டா அம்பானி. இந்நிலையில் இவர் பயன்படுத்தும் கைப்பை (Hand Bag) தான் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது.

நீட்டாவின் ஹேண்ட்பேக் கடந்த 2017ஆம் ஆண்டு கிறிஸ்ட்டீஸ் ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது. அந்தக் ஹேண்ட்பேக் முதலைத் தோலால் ஆனது என்றும் அதில் 240 வைரக்கற்கள் பதிக்கப்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நீட்டாவின் ஹேண்ட்பேகின் விலை இரண்டு கோடியே ஆறு லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

இரண்டு கோடியே ஆறு லட்சம் விலை கொண்ட அந்த ஹேண்ட்பேக் உடன் பிரபல பாலிவுட் நடிகைகள் கரிஷ்மா மற்றும் கரினா கபூருடன் நீட்டா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com