\
தீவிர புயலாக மாறியது நிசர்கா... இன்று கரையை கடக்கிறது..!

தீவிர புயலாக மாறியது நிசர்கா... இன்று கரையை கடக்கிறது..!

தீவிர புயலாக மாறியது நிசர்கா... இன்று கரையை கடக்கிறது..!
Published on

அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முன்னதாக அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி இந்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது.


புயலானது மும்பையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 215 கிலோ மீட்டர் தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 440 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இந்தப் புயலானது வடகிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மேலும் நிசர்கா புயலானது வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையை கடக்கும் எனவும் ஹரீஹரேஷ்வர் மற்றும் டாமன் இடையே அலிபாக் அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com