டோக்லாம் செல்கிறார் நிர்மலா சீதாராமன்

டோக்லாம் செல்கிறார் நிர்மலா சீதாராமன்
டோக்லாம் செல்கிறார் நிர்மலா சீதாராமன்

இந்திய - சீன எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செல்கிறார்.

சிக்கிம் எல்லை அருகே இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் இடமான, டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் 12 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைத்து வந்தது. இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இந்திய ராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்தன. இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என சீனா மிரட்டல் விடுத்தது. இதனால் அங்கு பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு இருதரப்பும் படைகளை வாபஸ் பெற்றன.
இந்நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன், இன்று டோக்லாம் பகுதிக்கு செல்கிறார். தற்போதைய நிலவரம் குறித்து ராணுவ உயர‌திகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் விவாதிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com