நிர்மலா சீதாராமன்முகநூல்
இந்தியா
அன்னபூர்ணா விவகாரம்: "வரித்தொடர்பாக இன்னும் 7 நாட்களுக்கு ..." - சூசகமாக பேசிய நிர்மலா சீதாராமன்
அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படும் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நகைச்சுவையாக பேசினார்.
பாண்டி லிட் ஃபெஸ்ட் என்ற இலக்கியவிழாவின் நிறைவு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அவரை வரவேற்று பேசிய ஆனந்த் என்பவர், “விழா முடிவதற்குள் அனைவரும் வருமானவரியை கட்டிவிடுங்கள்” என நகைச்சுவையாக பேசினார்.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், “வரித்தொடர்பாக இன்னும் 7 நாட்களுக்கு என்னுடன் பேசாதீர்கள்” என ஆனந்த்தை பார்த்து சொன்னதுடன், “அப்படி இல்லாவிட்டால் என்னிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடுவார்கள்” என நகைச்சுவையுடன் சொல்லி தனது உரையை தொடர்ந்தார்.
Headlines: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான ரவுடி என்கவுன்ட்டர் முதல் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணி வரை