இந்தியா
நிர்மலா சீத்தாராமனுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
நிர்மலா சீத்தாராமனுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை முப்படைத் தளபதிகள் டெல்லியில் சந்தித்தனர். தரைப்படை, கப்பற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் நிர்மலா சீத்தாராமனை அவரது வீட்டில் சந்தித்து பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் பாதுகாப்புத்துறை மேற்கொண்டுள்ள திட்டங்கள் குறித்தும், சவால்கள் பற்றியும் விளக்கினர். பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நிர்மலா சீத்தாராமன் நாளை பொறுப்பேற்கவுள்ளார். நிர்மலா சீத்தாராமனுக்கு முப்படைகளையும் நவீனமயமாக்குவது உள்ளிட்ட சவால்கள் காத்திருக்கின்றன.