இந்தியா
இந்திய- சீன எல்லையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
இந்திய- சீன எல்லையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய- சீன எல்லையான லடாக் பகுதிக்கு சென்று இந்திய வீரர்களை சந்தித்தார்.
பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு நிர்மலா சீதாராமன், இந்திய-சீன எல்லைப் பகுதியில் உள்ள தோய்ஸ் ராணுவ முகாமுக்கு சென்று வீரர்களுடன் உரையாடியிருந்தார். இந்நிலையில் இப்போது உலகின் மிக உயர்ந்த போர்க்களமான தவ்ளத் பெக் ஓல்டி (Daulat Beg Oldie)க்கு சென்ற அவர், ராணுவ அதிகாரிகளையும், வீரர்களையும் சந்தித்து உற்சாகமாகப் பேசினார்.
அப்போது கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களின் தியாகத்தை அவர் வெகுவாக பாராட்டினார். ராணுவ அமைச்சர் ஒருவர் அப்பகுதிக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.