மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்முகநூல்

”இவ்வளவு வரியா?”- பலத்த கைத்தட்டலைப் பெற்ற இடைத்தரகரின் கேள்வி! பதில் சொல்லாமல் நழுவிய நிதியமைச்சர்!

புரோக்கர்களை விடவே அதிகமாக இந்திய அரசு சம்பாதிக்கிறது. இதில் முதலீடு என்னுடையது. ரிஸ்க் என்னுடையது. ஆனால், முழு லாபத்தையும் அரசே எடுத்துக்கொள்கிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டிகளும், நிகழ்ச்சிகளில் அவர் பேசும் வீடியோக்களும் அவ்வவ்போது வைரலாக பகிரப்படுவது உண்டு. அந்த வகையில், மும்பை பங்குச்சந்தை எக்ஸ்சேஞ் நிகழ்ச்சியில் டிரேடிங் செய்யும் நபர் ஒருவர் கேட்ட விரிவான ஆதங்கத்துடன் கூடிய கேள்விகளும், அதற்கு பதில் இல்லை என்பதை நிர்மலா சீதாராமன் சொன்ன விதமும் தான் இன்று காலை முதல் வைரலாகி வருகிறது.

பிரஃபுல் ஷா, பைலட் கேப்பிடல் (கேள்வி):

ஒரு ஸ்டாக் மார்க்கெட் புரோக்கராக சில்லறை முதலீட்டாளர்களுக்கு நாங்கள் டிரேடிங் செய்கிறோம். CGST, IGST, Stamp Duty, STT, Long Term Capital Gain Tax என எண்ணற்ற வரிகளை சுமத்துகிறீர்கள். புரோக்கர்களை விடவே அதிகமாக இந்திய அரசு சம்பாதிக்கிறது. இதில் முதலீடு என்னுடையது. ரிஸ்க் என்னுடையது. ஆனால், முழு லாபத்தையும் அரசே எடுத்துக்கொள்கிறது. ரிஸ்க், ஊழியர்கள், பணம் என எல்லாவற்றையும் இதில் முதலீடு செய்யும் நான் இந்தத் தொழிலின் working Partner. நீங்கள் Sleeping Partner. இதுபற்றி உங்கள் கருத்து என்ன..?

Nirmala sitharaman
Nirmala sitharamanpt desk

மும்பையில் யாராவது வீடு வாங்க வேண்டும் என யோசித்தாலே அவர்களுக்கு தலை சுற்றிவிடும். என்னிடம் இருப்பது ஒயிட் மணி தான். நான் வரி கட்டுகிறேன். நான் எல்லாவற்றையும் செக் மூலம் கட்ட முடியும். என்னுடைய வங்கிக்கணக்கில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் ஏற்கெனவே வரி பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இப்போது நான் மீண்டும் Stamp Duty, GST எல்லாவற்றையும் மீண்டும் கட்ட வேண்டும். இது கிட்டத்தட்ட 11% வந்துவிடுகிறது. வருமானமே இல்லாத நான் இதில் என்ன செய்ய வேண்டும்..?

நிர்மலா சீதாராமன்:

இதற்கு என்னிடம் பதில் இல்லை. Sleeping Partner இங்கே அமர்ந்துகொண்டு என்ன பதில் சொல்ல முடியும்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
’மீண்டும் தேர்தல் பத்திரத்தை கொண்டுவருவோம்’ - நிர்மலா சீதாராமன் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com