2 மணி நேரம் 5 நிமிடம் வாசித்த பட்ஜெட்டை படித்த நிர்மலா சீதாராமன் !

2 மணி நேரம் 5 நிமிடம் வாசித்த பட்ஜெட்டை படித்த நிர்மலா சீதாராமன் !
2 மணி நேரம் 5 நிமிடம் வாசித்த பட்ஜெட்டை படித்த நிர்மலா சீதாராமன் !

2019-20ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நிதிநிலை அறிக்கையை 2 மணி நேரம் 5 நிமிடங்கள் வாசித்தார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு நீள பட்ஜெட் இது. பொதுவாக சூட்கேஸில் பட்ஜெட் ஆவணங்கள் கொண்டு வரப்படுவதே வழக்கம். ஆனால் நிர்மலா சீதாராமன் அந்த நடைமுறையை மாற்றி சிவப்பு உறையில் ஆவணங்களை எடுத்து வந்தார். கல்வித்துறை, விளையாட்டுத்துறைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். 

மேலும் தன்னுடைய பட்ஜெட் உரையின் போது புறநானூற்று பாடலை சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றார்‌. பகல் 11 மணிக்குத் தனது உரையைத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், 2 மணி நேரம் 5 நிமிடங்கள்  பட்ஜெட்டை வாசித்தார். இது தவிர பட்ஜெட் தாக்கல் செய்யும் ஆறாவது தமிழர் என்ற பெயரையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார். இதுவரை ஆர்.கே.சண்முகம் செட்டியார்‌, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், ப.சிதம்பரம் ஆகியோர் தாக்கல் செய்த நிலையில் நிர்மலா சீதாராமன் ஆறாவது தமிழர் என்ற சிறப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com