\
நிரவ் மோடியின் நீதிமன்றக்காவல் செப்.19 வரை நீட்டிப்பு

நிரவ் மோடியின் நீதிமன்றக்காவல் செப்.19 வரை நீட்டிப்பு

நிரவ் மோடியின் நீதிமன்றக்காவல் செப்.19 வரை நீட்டிப்பு
Published on

வங்கிக்கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை, செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியவர் வைர வியாபாரி நிரவ் மோடி. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், லண்டனில் பதுங்கியிருந்த நிரவ் மோடியை அந்நாட்டு காவல்துறை கடந்த மார்ச் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தது. 

அவர் வீடியோ கான்பரன்சிங் முறையில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை, வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி டான் இக்ராம் ஆணையிட்டார். அவரை நாடு கடத்துவது குறித்த வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com