ரூ19 கோடி மதிப்பிலான வைரங்கள் மோசடி? - நிரவ் மோடியின் சகோதரர் மீது குற்றச்சாட்டு

ரூ19 கோடி மதிப்பிலான வைரங்கள் மோசடி? - நிரவ் மோடியின் சகோதரர் மீது குற்றச்சாட்டு
ரூ19 கோடி மதிப்பிலான வைரங்கள் மோசடி? - நிரவ் மோடியின் சகோதரர் மீது குற்றச்சாட்டு

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் பல கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு சென்று கைதான நிரவ் மோடியின் சகோதரர் நிஹல் மோடி மீது அமெரிக்காவில் 2.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வைரங்களை மோசடி செய்ததாக நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் பிரபல வைர நகை நிறுவனமான LLD நிறுவனத்திடமிருந்து 2.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வைரங்களை கடன் அடிப்படையில் பெற முறைகேடான ஆவணங்களை பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்படி வாங்கிய வைரங்களை தனிப்பட்ட தேவைக்காக நிஹல் மோடி விற்பனை செய்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மோசடி குறித்து அறிந்து கொண்ட LLD நிறுவனம் அதை வேண்டி கோரிக்கை வைத்துள்ளது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என நிஹல் மோடி நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி வழக்கில் நிஹலும் தேடப்படும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com