‘நிபா’வைரஸ் அபாயம் : எம்.எல்.ஏ-வால் பேரவைக்குள் ஏற்பட்ட சர்ச்சை!

‘நிபா’வைரஸ் அபாயம் : எம்.எல்.ஏ-வால் பேரவைக்குள் ஏற்பட்ட சர்ச்சை!
‘நிபா’வைரஸ் அபாயம் : எம்.எல்.ஏ-வால் பேரவைக்குள் ஏற்பட்ட சர்ச்சை!

கேரள சட்டப்பேரவைக்குள் எம்.எல்.ஏ ஒருவர் முகமூடி மற்றும் கையுறை அணிந்து வந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

கேரள மாநிலம் சட்டப்பேரவையில் இன்று ‘நிபா’வைரஸ் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு இடையே, குட்டியாடி தொகுதியின் எம்.எல்.ஏ-வான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த பாராக்கல் அப்துல்லா முகமூடி மற்றும் கையுறை அணிந்து வந்ததால் அவை முழுவதும் சலசலப்புடன், சர்ச்சையும் ஏற்பட்டது. ஆனால் அவரது இந்தச் செயலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சினர் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். 

இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ‘ஒரு முக்கியமான பிரச்னை தொடர்பான விஷயத்தில் இப்படி செய்வது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது’ என்றார். சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறுகையில், ‘இது ஒரு கேலிக்கூத்தான செயல். உயிரைக்கொள்ளும் அந்த வைரஸ் தொடர்பாக அரசு தீவிரமாக கவனித்து நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். பின்னர் பினராயி பேசும் போது, “தற்போதும் ‘நிபா’ வைரஸ் பாதிப்பு உள்ளதுதான். அதற்காக அரசு அனைத்து உரிய நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. சுகாதாரத்துறை முழுமையாக தலையிட்டு தீர்வு கண்டு வருகிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ முகமூடி அணிந்து வருவது, அவரை அவரே வேடிக்கையாக சித்தரிக்கும் செயல்” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறுகையில், “கோழிக்கோடு பகுதியில் அனைவருமே முகமூடி அணிந்து நடமாடுகின்றனர். அதனை எதிரோலியாகவே அப்துல்லா முகமூடி அணிந்து வந்துள்ளார்” என்றார். இதுதொடர்பாக அப்துல்லாவே கூறும்போது, “குட்டியாடி-பெரம்பரா சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ‘நிபா’ வைரஸ் பாதிப்பு நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு வரவே நான் இப்படி செய்தேன்” என்றார். இருப்பினும் அவரது இந்தச் செயல் தொடர்பாக சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் விசாரணை நடத்தியுள்ளார். கடந்த மே 17ஆம் தேதி முதல் தற்போது வரை 16 பேர் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் ‘நிபா’ வைரஸால் உயிரிழந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com