\
உ.பியில் மீண்டும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது - 75பேர் படுகாயம்

உ.பியில் மீண்டும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது - 75பேர் படுகாயம்

உ.பியில் மீண்டும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது - 75பேர் படுகாயம்
Published on: 

உத்தரப்பிரதேசத்தில் காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 75க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 

ஆருய்யா பகுதியில் அதிகாலை இரண்டரை மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தில் 6 க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. விபத்து நடைபெற்றதற்கான காரணம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விபத்தில் சிக்கியுள்ளபயணிகளை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் சுமார் 75க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், உத்தரபிரதேசத்தில் முசாபர் நகர் ‌அருகே உத்கல் எக்ஸ்ப்ரஸ் ரயில் கவிழ்ந்து வி‌பத்துக்குள்ளானதில் 23‌பயணிகள் உயிரிழந்தனர். கோரக்பூர் குழந்தைகள் உயிரிழப்பு, ரயில் கவிழ்ந்து விபத்து என அடுத்தடுத்து நடைபெற்று வரும் சோக நிகழ்வுகள் தங்களை கவலை கொள்ளச் செய்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com