'மாத வாடகை ரூ.4,610 மட்டுமே!' - 9 முதல்வர்களுக்கு லுடியன்ஸ் அரசு பங்களாவில் இடம்

'மாத வாடகை ரூ.4,610 மட்டுமே!' - 9 முதல்வர்களுக்கு லுடியன்ஸ் அரசு பங்களாவில் இடம்

'மாத வாடகை ரூ.4,610 மட்டுமே!' - 9 முதல்வர்களுக்கு லுடியன்ஸ் அரசு பங்களாவில் இடம்
Published on

டெல்லி லுடியன்ஸ் அரசு பங்களாவில் எந்தெந்த மாநில முதல்வர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது. 

டெல்லியின் புகழ்பெற்ற ஏரியாக்களில் ஒன்று லுடியன்ஸ். அரசு பங்களாக்கள் அதிகம் உள்ள ஒரு இடம் இது. இங்குள்ள பங்களாக்கள் முக்கியமாக அரசாங்கத்திற்கு சொந்தமானவை. இந்தப் பங்களாக்கள் பெரும்பாலும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் போன்றோருக்கு வாடகைக்கு ஒதுக்கப்படும். இந்தியாவின் முக்கிய முகங்கள் பலருக்கும் அலுவலகங்கள் அந்தப் பகுதியில் உள்ளன. அங்குள்ல பங்களாக்களுக்கு எப்போதுமே மவுசும் தேவையும் அதிகம். பெரும்பாலான முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் இந்தப் பங்களாக்களை பெறுவதில் சத்தமில்லாமல் போட்டி போடுவது வழக்கம்.

ஆனால், இங்கு தங்குவதற்கு அனைத்து தகுதியும் இருந்தும் அவர்களுக்கு இடமளிப்பதில் கூட அரசாங்கம் பெரும் தடைகளை எதிர்கொள்கிறது. ஏனென்றால் குறைவான எண்ணிக்கையில் பங்களா இருப்பதால்தான். அதேபோல் ஏற்கெனவே இருக்கும் விவிஐபிக்கள் இதனை காலி செய்ய மறுப்பதும் ஒரு காரணம். டெல்லிக்கு அரிதாக வருகை தரும் மாநில முதல்வர்களுக்கு இந்தப் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் டெல்லியில் ஒரு அலுவலகம் உள்ளது, கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநில விருந்தினர் மாளிகையிலும் ஒரு முதல்வர் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லிக்கு வருகை தரும்போது அவர்கள் இதை பயன்படுத்துவார்கள்.

ஆனால், பல மாநில முதல்வர்கள் இந்த விருந்தினர் மாளிகை இருந்தபோதிலும், லுடியன்ஸ் பகுதியில் பங்களாக்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். தற்போது இந்தப் பகுதியில் 9 மாநில முதல்வர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என 'இந்தியா டுடே' செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதியில் எத்தனை முதல்வர்களுக்கு அரசு தங்குமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, 'இந்தியா டுடே' தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்திடம் தாக்கல் செய்திருந்தது. 

அந்த ஆர்டிஐயில் எவ்வளவு வாடகை செலுத்தப்படுகிறது, யார் அதை செலுத்துகிறார்கள், எப்போது, ஏன் இந்த வீடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது, விண்ணப்பித்த எத்தனை முதலமைச்சர்களுக்கு லுட்டீனின் பங்களா கிடைக்கவில்லை என்பது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டிருந்த நிலையில், பல தகவல்களுக்கு பதில் கொடுக்காமல் குறிப்பிட்ட சில கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான காரணம், ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட முதல்வர்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்படவில்லை. 

அதேநேரம் எந்தெந்த முதல்வர்களுக்கு பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்குதான் 9 மாநில முதல்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அரசு பதில் கொடுத்துள்ளது. இந்த 9 பேரில் 7 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவர் என்.டி.ஏ கூட்டணியை சேராதவர்கள். அவர்கள் தெலங்கானாவைச் சேர்ந்த கே சந்திரசேகர் ராவ் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி ஆகியோர். மற்ற ஏழு பேரில் பீகாரின் நிதிஷ்குமார் யாதவ், அசாம், உத்தரகான்ட், திரிபுரா, நாகலாந்து, மிசோரம், மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் ஆவர்.

இதில், சில முதல்வர்களுக்கு VIII வகை குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், இது 3,700 முதல் 5,600 சதுர அடி வரை கொண்ட பங்களாக்கள் என்றும், இந்த பங்களாக்களுக்கு மாதத்திற்கு ரூ.4,610 வரை வாடகைக்கு விடப்பட்டுள்ளன என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பங்களாக்களின் உண்மையான சந்தை வாடகை மாதத்திற்கு ரூ.18-25 லட்சம் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக 'இந்தியா டுடே' தனது செய்தி தொகுப்பில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com